சென்னை:
நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில், மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கை, இன்று வெளியிடப்படுகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங் களில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அவர்கள் டிவிட் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து நயன்தாரா குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 38வயதாகும் நயன்தாரா, தன்னைவிட வயது குறைந்த விக்னேஷ் சிவனை திருமணம் முடித்துள்ள நிலையில், அவருக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லையா? அல்லது அவர் மூன்றாம் பாலினத்தவரா (திருநங்கை) என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வாடகை தாய் சட்டப்படி, திருமணம் முடிந்த 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியாது. அதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், “விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்து, விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த விசாரணை குழுவினர், முதற்கட்டமாககுழந்தை பிறந்த மருத்துவமனையை விசாரிக்கவும், தேவைப்பட்டால் விக்னேஷ், நயன்தாரா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டது.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவிக்கையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் வாயிலாக இரட்டை குழந்தைகள் பெற்றது தொடர்பான குழுவினரின் விசாரணை முடிந்துள்ளது. தனியார் கருத்தரிப்பு மையத்தின் வாடகைதாய் விவகாரம் தொடர்பான விசாரணையும் முடிந்துள்ளது. இந்த இரண்டு விசாரணை அறிக்கையும், நாளை மாலை வெளியிடப்படும் என்றார்.