நடிகை பலாத்காரம் செய்து கொலையா?:   15 ஆண்டுகளாக நீதி கேட்டு கதறும் தாய்

Must read

பிரதியுஷா

ஹைதராபாத்:

னது மகளை பலாத்காரம் செய்து விஷத்தைக் கொடுத்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின்  தாயார் சரோஜினி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழில் முரளியுடன் மனுநீதி என்ற படத்தில் நடித்தவர் பிரதியுஷா. தொடர்ந்து நடிகர் பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்’, விஜயகாந்த்துடன் தவசி’ என பல படங்களில் நாயகியாக நடித்தார்.

சித்தார்த்

பிரதியுஷா தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில்,  கடந்த 2002ம் வருடம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சித்தார்த் என்பவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

அவருடன் சேர்ந்து விஷம் குடித்த்த காதலன் சித்தார்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகைச்சைக்குப் பிறகு பிழைத்துக்கொண்டார்.

பிரதியுஷா மரண  வழக்கு கடந்த 15 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரதியுஷாவின் தாயார்  சரோஜினி சில நாட்களுக்கு முன், செய்தியாளர்களை சந்தித்தார்.

சரோஜினி

அப்போது அவர் , “என் மகள் பிரதியுஷா தற்கொலை செய்துகொள்ளவில்லை.  அவளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கொன்றுவிட்டார்கள்.   அவளது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அது மறைக்கப்பட்டு இருக்கிறது.

பிரதியுஷா  மரணத்தால் அதிர்ச்சியில் என் மகனின் மனநிலை பாதித்துவிட்டது.

பிரதியுஷாவின் காதலன் என்று சொல்லப்பட்டவர், தன் உதட்டில் விஷத்தை தடவிக்கொண்டு, மயக்கம் அடைந்தது போல் நடித்து இருக்கிறார். இந்த கொலை குறித்து  இதுவரை போலீசார் ஒரே ஒரு ஆதாரத்தைக்கூட சேகரிக்கவில்லை.
இந்த கொலை நடந்து நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. யாரும் எனக்கு ஆதரவாக  குரல் கொடுக்கவில்லை. நான் தன்னந் தனியாக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று கதறி அழுதார்.

இவரது பேட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

68 COMMENTS

Comments are closed.

Latest article