மும்பை

டிகை ஹேமமாலினிக்கு மறைந்த இசைக் கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் விருது வழங்கப்பட்டுள்ளது.\

ஆஷா போஸ்லே, ஏ.ஆா். ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான், ஷில்பா ராவ் உள்ளிட்ட இசை பிரபலங்களுக்கு பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் குரு ஆவார்  இவர் கலைச்சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.

மும்பையில் இவரது நினைவு நாளையொட்டி ‘ஹாஸ்ரி’ இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள ‘ஜியோ’ பன்னாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு ‘பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்’ விருது வழங்கப்பட்டது.

நடிகை ஹேமமாலினி இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, அவருக்கு இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் இந்த விருதை வழங்கினர். விழாவைத் தொடா்ந்து, நடைபெற்ற ஏ.ஆா்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ரகுமான் பல்வேறு சூபி பாடல்களைப் பாடி, தனது குருவுக்கு மரியாதை செலுத்தினார்.