பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பரவியதும் திரையுலகில் அதிர்ச்சி எதிரொலித்தது. சுஷாந்த்தின் மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. டி.வி மற்றும் இனையதளங்களில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ச்சி யாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு நடிகை தீபிகா படுகோனே கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்திருக் கிறார்.
தீபிகா வெளியிட்டுள்ள மெசேஜில் கூறியிருப் பதாவது:
’ அருமை மீடியா நண்பர்களே,
கிரிமினல்கள் ’குற்றம்’ செய்கிறார்கள்
மக்கள் தற்கொலை செய்வதில்லை
அவர்கள் தற்கொலையில் சாகடிக்கப்படுகிறார்கள்.
அவர்களது அந்த நடவடிக்கை ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடாகும்
நன்றி.
இவ்வாறு தீபிகா படுகோனே தெரிவித்திருக்கிறார்.