இவர்கடந்த 2017 ஆம் ஆண்டு அமலா பால் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார்.
கேரளாவில் அந்தக் காரை வாங்கினால் வாகன பதிவு எண் பெறுவதற்காக ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டும். எனவே புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருப்பதாகக் கூறி போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.18 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை நடத்தியுள்ளது. இதனையடுத்து அமலாபால் மீது வரி ஏய்ப்பு செய்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.