விரைவில் வெளிவர இருக்கும் கிளாப் திரைப்படத்தின் கதாநாயகி ஆக்காங்ஷா சிங்.

நடிகை ஆக்காங்ஷா சிங் பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியான மல்லி ராவ் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்த பயில்வான் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இந்நிலையில் நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை க்யான் பிரகாஷ் சிங் நேற்று உயிரிழந்துள்ளார். தனது தந்தையின் மறைவு குறித்து நடிகை ஆக்காங்ஷா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார். நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.