சென்னை:

மிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, வாக்கு பதிவினை கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கி வருகின்றன.

இந்த நிலையில், பலர் பூத் சிலிப் கொண்டுவர வில்லை என்று தேர்தல் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், வாக்குச் சாவடிக்கு சென்றுவிட்டு வாக்காளர் அட்டை இல்லாததால் சிவகார்த்திகேயன் திரும்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரும் பூத் சிலிப் இல்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

,அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என  டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன், தனக்கே ஓட்டு இல்லை  என்று திருப்பி அனுப்பப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உளளது.

இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்ய அவர் குடியிருப்பு பகுதியில் உள்ள வளசரவாக்கம்  குட்ஷெப்பர்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு அளிக்க சென்றால். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் அவர் வாக்களிக்க செல்லவில்லை.  ஆனால், அவரது மனைவிக்க ஓட்டு இருந்தது. அவர் வாக்களித்தார்.

அதுபோல  துணை நடிகர் ரோபோ சங்கர் வாக்கு மையம் திறப்பதற்கு முன்பாகவே சாலி கிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் காத்திருந்தார். அவரது பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இயக்குனரும், நடிகருமான  ரமேஷ் கண்ணாவிற்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஓட்டு போட இயலாத நிலை ஏற்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என புகார் கூறி உள்ளனர்.