சென்னை:
ந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடத்திவரும் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பாக். ஆக்ரிமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு பயங்கரவாதிகள்
a
முகாம்கள் அழிக்கப்பட்டன. இன்னொரு புறம், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் நீரைத் தடுக்க அணை கட்டுவது குறித்தும் ஆலோசனை நடந்துவருகிறது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
bஆனால் சீனா அரசோ பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனாவில் உற்பத்தியாகி இந்தியா வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, இந்தியாவுக்கு வரும் நீரைத் தடுக்க திட்டமிட்டு வருகிறது.
இதனால் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விவேக், “சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக வரும் தீபாவளிக்கு சீன பட்டாசுகளை வாங்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ விழித்துக்கொள்வோம் நாம்! இனி சீனா பொருட்கள் வேண்டாம்! இந்திய உற்பத்திகளையே உபயோகிப்போம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் பதிவிட்டுள்ளார்.