த்தப்புற்று நோயால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பவர் 12 வயது சிறுமியான கோடீஸ்வரி. நோய்த்தாக்கத்தின் இறுதி நிலையில் இருக்கும் இவர்,  சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தனுஷ் ரசிகையான இவருக்கு, தனுஷை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
 
IMG-20160727-WA0038
இந்த விஷம், தனுஷின் காதுக்கு போக, “அட. இன்று என் பிறந்தநாளாயிற்றே.. இன்று அந்த சிறுமியுடனே கொண்டாடிவிடலாம்” என்று சொன்னவர், அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்றார்.
 

கோடீஸ்வரி குடும்பத்துடன் தனுஷ்
கோடீஸ்வரி குடும்பத்துடன் தனுஷ்

 
இவரைப் பார்த்தும் சிறுமி கோடீஸ்வரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “தனுஷ் அங்கிள். தனுஷ் அங்கிள்” என்று அத்தனை அன்போடு பேசினாராம்.
அவரை நலம் விசாரித்த தனுஷ், அங்கேயே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வந்திருக்கிறார்.
நல்ல மனசுதான், தனுஷூக்கு!