பிக்பாஸ் நடிகர் ஆரவ். நடிகை ஓவியா வுக்கும் காதல் என்று கடந்த 2 வருடமாக கிசுகிசு வந்துக்கொடிருந்த நிலையில் அதை இருவருமே மறுத்து வந்தனர். இதையடுத்து அந்த காதல் கிசுகிசு பிசுபிசுத்துப் போனது

இந்நிலையில் நேற்று ஆரவுக்கும் கவுதம் மேனன் இயக்கும் ’ஜோஷுவா இமைபோல் காக்க’ படத்தின் ஹீரோயின் ரஹேவுக்கும் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். குடும்பதார் சம்மததுடன் இந்த திருமனம் நடந்தது.

 

திருமணத்திற்கு பிறகு மனைவியை எண்ணி ஆரவ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மேசேஜ் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘இமை போல் காப்பேன்’ என ராஹிக்கு உறுதி கொடுத்திருக்கிறார். ஆரவின் அன்பிற்கு ரசிகர்கள் லைக்குளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.