சென்னை: சென்னை போன்ற பகுதிகளில் மெக்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அதை பெருமையாகவும் மார்த்தட்டி வருகின்றன. சமுக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது சாதனை என பறைசாற்றி வருகின்றன.
ஆனால், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன், 1960ஆம் ஆண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது வீட்டில் உணவு சமைத்து வழங்கி உள்ளார். சாதாரண மனிதரைப் போல தலையில் முண்டாசு (தலைப்பாகை) கட்டிக்கொண்டு, வேஷ்டியை மடித்துக் கொண்டு சமையல் செய்வர்களுடன் இணைந்து, சென்னை மக்களின் பசியை போக்கிய அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பெருவெள்ளம், 1960 ஆம் ஆண்டு சென்னையை சூழ்ந்த போது, மக்கள் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்க கூடாது என்று, மூன்று வேளையில் தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்காக வழங்கினார்.
குறிப்பாக, 1960 -ல் மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டில் இருந்து சமைத்த உணவுகளே பல மக்களின் பசியை ஆற்றியது.
அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது… அந்த புகைப்படம் இது தான்.