சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி அங்குள்ள அரசு பள்ளி வாளகத்தில் நடைபெற்று வருகிறது.  இன்று காலை அங்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, தயாரிக்கப்பட்ட காலை உணவான பொங்கலை ருசி பார்த்தார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவான உள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் பெய்து வந்த அடை மழை காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி, தி.நகர் உள்பட மாநகரமே வெள்ளத்தில் மிதந்தன. பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, வேறு இடங்களிலும் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். பல பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டு தற்போது பகுதி பகுதியாக மீண்டும் வழங்கப்பட்டு வருகிறத.  தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3வேளையும் உணவு வழங்கும் வகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, 67வது வார்டு, Greater Chennai Corporation நடுநிலைப் பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த  இடத்தை இன்று காலை வந்து நேரடியாக  பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவான வெண்பொங்கலை ருசி பார்த்தார். பின்னர் அந்த உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோக்கும் வகையில் எடுத்துச் செல்லப்பட்டது.