பிரபல நடிகர் சண்முகசுந்தரம் மறைந்தார்

சென்னை:

பிரபல நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ்த்  திரைப்படங்களில் குணச்சித்திரம்,வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து  வந்தவர்.

நாடக நடிகராக வலம் வந்த அவர், 1963ல் ‘இரத்தத் திலகம்’ மூலம் திரையுலகில் பிரவேசித்தார்.
சண்முகசுந்தரம்! நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  அத்துடன்   ‘அண்ணாமலை’, ‘அரசி’ உள்ளிட்ட  பல டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார் .

இவரது தங்கை தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா.

சமீபகாலமாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இன்று இயற்கைஎய்தினார்.

மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து இறுதியாத்திரை நாளை புறப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Actor shanmuga Sundram died