சென்னை: நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 3வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே நடிகைகள்  திரிஷா, குஷ்பு, மீனா மற்றும், நடிகர் சத்யராஜ், தெலுங்கு திரையுலகில் நடிகர் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன், கீதாஞ்சலி செல்வராகவன், இயக்குநர் செல்வராகவன் உள்பட பலருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த , ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமார், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி, தேர்தலில் போட்டியிடுவது, ரச்சார வீயூகங்களை வகுப்பது, தொண்டர் களைப் பார்ப்பது, எந்தெந்த தொகுதி, யார் யார் போட்டியிடுவது என்று கலந்தாலோசித்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும,   தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுபோல கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் முகமிட்டிருந்த ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.