salman-khan_650x400_81467861387
சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, சல்மானை விடுதலை செய்தது.
சூரஜ் பர்ஜட்யா இயக்கிய ஹம் சாத் சாத் ஹைன் எனும் ஹிந்தி படத்தின் படபிடிப்பின்போது ஜோத்பூர் சென்ற சல்மான் கான் அங்கு இரவு நேரங்களில் குடித்து விட்டுக் கும்மாளமிடுவது, ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மொட்டை மாடியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது, காட்டுக்குள் வேட்டையாடி அரியவகை மான் களை சுட்டுவீழ்த்தியது எனப் பல சேட்டைகளில் ஈடுபட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கியின் லைசென்ஸ் காலாவதியாகி இருந்தது. அதனைக் கொண்டு அரியவகை மான்களை அவர் வேட்டையாடினார். மானைக் கொன்ற வழக்கு, சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்து இருந்தது என ஜோத்பூர் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். எட்டு வருடங்கள் இழுவைக்குப் பின், 108 பக்க தீர்ப்பு வழங்கிய ஜோத்பூர் நீதிமன்றம், சல்மான் கானின் பொறுப்பற்றத் தன்மையைக் கடுமையாக விமர்சித்தது. 38 சாட்சிகள் (8 பேர் பிறழ் சாட்சிகளாயினர்), 78 ரத்தக்கறை ஆடைகள்,  ஆறு கத்திகள், 5 ஜிப்ஸி வாகனம், ஆகிய சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்கியது.
கோர்ட்டில் இவர் எப்படி ஜிப்சி வாகனத்தில் மானை விரட்டி மானின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொல்வார் என்று நிருபிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின்போது, ஜோத்பூர் நீதிமன்றம் இரண்டு விசயங்களை மேற்கோள் காட்டியது. 1. பிரபலங்கள் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. 2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.” இதனை அடுத்து 2007ம் ஆண்டு ஒரு வாரம் சிறையில் இருந்தார் சல்மான் கான். இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்து இந்திய நீதிமன்றத்தின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இரண்டு வழக்குகள், சல்மானின் ஒரே வழிமுறை:
செக்சன் 51- வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. செப்டம்பர் 26-27 தேதிகளில் பவாட் எனும் கிராமத்தில் இரண்டு மான்களைக் கொன்றதாகவும், 28-29 தேதிகளில் மதனியா எனுமிடத்தில் ஒரு மானைக் கொன்றதாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இரண்டு வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒரு வருடம் மற்றும் ஐந்து வருடம் சிறைத்தண்டனை விதித்து பிப்ரவரி 17, 2006, மற்றும் ஏப்ரல் 10, 2006ல் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்துச் செசன்ஸ் நீதிமன்றத்தில் முறையிட்டார் சல்மான். அங்கும் இது தள்ளுபடி செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 16,2015ல் துவங்கிய வழக்கு விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. நீதிபதி நிர்மல் ஜித் கவுர் மே 13,2016 அன்று தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இங்கு வாதாடிய சல்மானின் வக்கீல், மகேஸ் போரா, இந்த வழக்கின் முக்கியச் சாட்சியான ஜிப்சி வாகன ஓட்டுநர் ஹரிஸ் துலானி பொய்சாட்சி சொன்னதாகவும், ஆனால் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதால் ஒருமுறை கூட அவரைக் குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை. மேலும் சல்மானின் துப்பாக்கியின் தோட்டாவும், அவரது வண்டியிலிருந்து கைப்பற்றப் பட்ட தோட்டாவும் ஒத்துப் போகவில்லை என்றும் வாதிட்டார். எனவே சல்மான் விடுதலை செய்யப்பட வேண்டுமென வாதாடினார்.
இன்று கோர்ட்டில், இவ்வழக்கில் கைப்பற்றப் பட்ட தோட்டாக்கள், சல்மானின் துப்பாக்கியில் இருந்தவை அல்ல என நீதிமன்றம் முடிவு செய்தது. ஜிப்சி வண்டியின் ஓட்டுநர் மற்றும் சல்மானுடன் நடித்த நடிகர்களின் தலைமறைவு, இவ்வழக்கிலிருந்து சல்மான் தப்பிக்க வழிவகுத்தது.
இந்தியாவில், பணக்காரனாகவும், பிரபலமும் இருப்பது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான உத்தரவாதமாகத் திகழ்கின்றது. எனவே இன்றிரவு சல்மான் கான் கொண்டாட்டத்துடன் இருப்பார் என்பது உறுதி. salmaan2