ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் பொதுமக்கள் பணம் சுமார் ரூ. 2438 கோடி மோசடி செய்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குனரும் தமிழ்நாடு பாஜக-வின் விளையாட்டுப் பிரிவு செயலாளருமான ஹரிஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

மோசடியில் நடிகர் ஆர்.கே. சுரேசுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் ஆர்.கே. சுரேஷை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது காவல்துறை.

இந்த நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்கை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ. 2438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரிஷ் வாக்குமூலத்தையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்