தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பவர் முரளி சர்மா.
இவருக்கு ஹைதராபாதில் உள்ள நியூ லைப் தியோலாஜிக்கல் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான முறையில் சமூக சேவை செய்துவரும் இவரை பாராட்டி இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழில் அஞ்சான், தோனி, தேவி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் முரளி சர்மா.