கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

அந்த வகையில், தற்போது பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாறனுக்கு வயது 48.

நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

திரையுலகில் பல ஆண்டு காத்திருப்புக்கு பலனாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இந்தியன் ஆகிய படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்திருந்தது. ஆனால் அந்த படங்கள் வெளிவருவதற்குள் இவர் இயற்கை எய்தியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.