தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தயாரிப்பாளர் முரளி ராமசாமி மாரடைப்பால் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ராம நாராயணனின் மகன் முரளி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு லேசான மாரடைப்பு தான் என்றும் அதனால் அவர் ஓரிரு நாட்களில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.