சென்னை:

டிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை செய்துவருகிறார்.  அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற யூகம் எழுந்திருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,  நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு,  ஹைட்ரோ கார்பன்  விவகாரங்கள் குறித்தும்  எழுதி வருகிறார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை தமிழக போலீஸ், கைது செய்து சிறையிலடைத்தது. . இதற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார்கள். ஆளுங்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழில் கமல் பற்றி அருவெறுப்பூட்டும் வகையிலான “கவிதை” இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் திடீரென தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் கமல்ஹாசன். தற்போது அவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனால் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பாரோ என்ற யூகம் எழுந்துள்ளது.

=