பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி.எம். குமார் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார் தீர்த்தபதியாக அனைவராலும் அறியப்பட்டவர் ஜி.எம். குமார்.


பிரபு நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான ‘அறுவடை நாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜி.எம். குமார் அந்தப் படத்தை தெலுங்கில் ‘முவ்வ கோபாலுடு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்திருந்தார்.

அந்த படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது அவருக்கு கிடைத்தது.

கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த ஜி.எம். குமார் தற்போது உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.