நடிகர் தனுஷ்  போலி கையெழுத்தா? :   மேலூர் நீதிமன்றத்தில்  புதிய மனு

மேலூர்: நடிகர் தனுஷ் வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்-மீனாட்சி தம்பதி புதிய மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் தனுஷ், தங்கள் மகன் என்று வழக்கு தொடுத்துள்ள கதிரேசன் தம்பதி புதிய மனு ஒன்றை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தங்களுக்கு எதிராக தனுஷ் தாக்கல் செய்துள்ள மனுவின் நகல் வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.  அந்த மனுவில் உள்ளது தனுஷின் கையெழுத்து இல்லை  என்றும் போலியாக தனுஷின் கையெழுத்தை இட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.


English Summary
Actor Dhanush signed is forgery? : new plea in Melur court