டிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.

அதில்,  தன்னை  பாலாஜி, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலைியல் நித்யா, “என் கணவர் நடிகர் பாலாஜி, குடிக்கு அடிமையானவர். மது போதையில் என்னை அடித்து சித்திரவதை செய்வார்” என்று கதறலுடன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

”பாலாஜியும் நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.  என் வீட்டினரை எதிர்த்துதான் திருமணம் செய்துகொண்டேன்.

அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தும் நட்த விசியம் பிறகுதான் தெரிந்தது. அந்த அதிர்ச்சியையும் தாங்கிக்கொண்டு அவருடன் வாழ்ந்தேன்.

திருமணமான புதிதில் அவர் ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டுமே செய்து வந்தார். வருமானம் போதவில்லை. ஆகவே திருமணத்துக்கு முன் நான் பார்த்த வேலைக்கு மீண்டும் சென்றேன். முதல் ஆறு மாதங்கல் என்  சம்பளத்தில்தான் குடும்பம் நடந்தது.

அவருக்காக எல்லாவித சிரமங்களையும் சகித்துக்கொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்.

பிறகு அவருக்கு வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன. அப்போதுதாந் அவரது உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது.

திருமணத்துக்கு முன் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாக அவர் வெளிப்படுத்தியதே இல்லை. பிறகு மறைத்து வைத்து குடிக்க ஆரம்பித்தார். அடுத்து, நாள் முழுதும் குடிதான்.

படப்பிடிப்பு இல்லாவிட்டால் காலையிலேயே குடிக்க ஆரம்பித்துவிடுவார். இரவு வரை குடிப்பார். பிறகு போதையில் என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பிப்பார்.

குழந்தை பிறந்துவிட்டால் சரியாகிவிடுவார் என்று பொறுத்தக்கொண்டேன்.

ஆனால் நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகமானது. போதை ஏறிவிட்டால் என் போன்தான் முதல் பலி. இதுவரை ஏகப்பட்ட போன்களை உடைத்திருக்கிறார். என் லேப்டாப், வீட்டு டிவி, ஜன்னல் கண்ணாடி என்று ஏகத்துக்கு உடைத்து ரகளை செய்வார்.

என்னையும் கடுமையாக அடித்து உதைப்பார். காயம் ஏற்பட்டிருக்கிறது.

பாலாஜி – நித்யா
பாலாஜி – நித்யாஎன் பிறந்தநாளுக்கு வந்த பரிசுப்பொருட்களை எரித்தார். இதில் கதவும் சேதமாகிவிட்டது.

இவரது அடாவடியை அக்கம்பக்கத்து வீட்டினர் எவரும் தட்டிக்கேட்ட முடியாது.  என் பெற்றோர் கேட்டாலும் ஆபாசமாக ஏசுவார். ஆகவே அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டனர்.

இவரது கொடுமை பொறுக்க முடியாமல்  அவசர எண் நூறுக்குப் பலமுறைப் போன் செய்திருக்கிறேன். போலீஸ் வந்து சமாதானப்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள்.

அவர் பிரபலாக இருப்பதால் எல்லா இடங்களிலும் தப்பிச்சுட்டு இருக்கார்.

திருமணத்துக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து எம்.பி.ஏ. படித்தேன். உடனே “அங்கே யாரோடு சுத்துகிறாய்” என்று கேவலமாக பேச ஆரம்பித்தார். பிறகு நான் வேலைக்குச் சேர்ந்ததும் அங்கும் வேறு நபர்களுடன் என்னைத் தொடர்புபடுத்தி அசிங்கமாக பேச ஆரம்பித்தார். இப்படி இவரால் நான் நிறைய அவமானப்பட்டுவிட்டேன்.

ஆனாலும், காதல் திருமணம் செய்துகொண்ட நாம், பிறர் முன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தேன்.

ஒரு கட்டத்தில் அவரது டார்ச்சர் சொல்ல முடியாத அளவுக்குப் போனது. அப்போது அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். மருத்துவரும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் சில மருந்து மாத்திரைகளும் கொடுத்தார்.

ஆனால் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை. மருந்து மாத்திரைகளையும் சாப்பிடவில்லை. மீண்டும் குடி. பொறுக்க முடியாத சித்திரவதை.

இதனால் குழந்தையை தூக்கிக்கொண்டு என் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டேன். பிறகு ஈரோடு மகேஷ் அண்ணன்தான் எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று மணி நேரம் பேசி சமாதானப்படுத்தினார். அதனால் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தோம்.

ஆனால் அவரது குடி குறையவில்லை. குடித்தால் சைக்கோ போல நடந்துகொள்வார். அவர் அம்மாவையே அடித்து உதைத்திருக்கிறார். அப்படியானால் என்னை என்னென்ன சித்திரவதை செய்திருப்பார் என்று யோசியுங்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் குடித்துவிட்டு என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். என் சாதியைச் சொல்லி திட்டினார். ஒரு கட்டத்தில்  மாடிப்படியில் இருந்து என்னை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டார். மாடிப்படி முனை மோதியதில் என் முதுகில்  நான்கு எலும்புகள் முறிந்துவிட்டன.

நான் வலியில் கதறினேன். அவரோ, குழந்தையோடு வீட்டுக்குள் இருந்தார். கதவையும் தாழ்ப்பாள் போட்டுவிட்டார். பிறகு வேறு வழியின்றி நானே மருத்துவமனை சென்று அட்மிட் ஆனேன்.

அவர் ஒரு குடிகார சைக்கோ. அவருடன் சேர்ந்த வாழ்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இனி என் வாழ்க்கையே என் குழந்தைதான்” என்று கண்ணீருடன் தெரிவித்தார் நித்யா.