ஜல்லிக்கட்டு வேண்டும்!: நடிகர் சங்கம் அறிக்கை

Must read

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் அடையாளம் இருக்கிறது. இதையெல்லாம்  அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. அந்த வகையில் சிந்துவெளி நாகரிகம் கல்வெட்டில் இருந்து இன்று வரை ஏர்தழுவல் என்கின்ற ஜல்லிக்கட்டு தமிழர்களின் தொன்மை அடையாளமாய் இருந்து வருகின்றது.

சட்டத்திற்கு முன் ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கின்றது. ஆனால் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் இதை சட்டத்திற்கு புரியவைத்து நம்மொழி சார்ந்த கலாச்சாரங்களை வாழவைப்பது அவர்களுடைய கடமையாகிறது. கடவுள், மதம், வாழ்கை, பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் இப்படி எல்லாவற்றிர்க்கும் தன் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய நம் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் தனது கருத்தை பதிவுசெய்த சில நடிகர் நடிகையிடம், படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்ததக்கது. இந்த நேரத்தில் நம் கலைஞனும் பரமக்குடி மைந்தனுமான கமலஹாசன், தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமால் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான், என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழர்களின் மரபு சார்ந்த ஏறுதழுவல் அவர்களின் உணர்வுகளையும், உள் எழுச்சிகளையும் புரிந்துக்கொண்டு அது எல்லை மீறுவதற்க்கு முன் மத்திய அரசு அவசர சட்டம் ஏற்றியேனும், இந்த வருடம் ஏர்தழுவலை நடத்தி கொடுக்க வேண்டும், என நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறோம், அதற்காக காத்திருக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article