கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நடிகர் ஆர்யா….!

Must read

கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்யா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

 

More articles

Latest article