சென்னை: தீப்பெட்டி தயாரிப்பு தொழிலை பாதுகாக்க, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தங்கள் பங்களிப்பாக வழங்கப்பட்ட ரூ.5 கோடியை கொண்டு நிரந்தர ஆதார நிதி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வாரியத்தில் பதிவு மேலும் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,000/- வழங்கும் புதிய கல்வி நல உதவி திட்டம் ஏற்படுத்தியதற்கும், இவ்வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடையும் நேர்வில் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட நல உதவித் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.30,000/-மாக உயர்த்தியதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றார். இதில், தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய தீப்பெட்டி  உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், சிகலெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்களுக்கான வரிகளை குறைத்து, விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்இ, தீப்பெட்டி தொழில் தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பிப்ரவரி மாதம் வரை 61,141 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு சிகரெட் லைட்டர் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.