மதுரை: 
பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ராஜகண்ணப்பன்  உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்தது.. குறிப்பாக பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியது..
இந்நிலையில், அண்மையில் சென்னை ஆவடி அருகே மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாகப் பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து  கேள்வி ஒன்றுக்கு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்தார்.
அப்போது, அவர்,  பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார்.