cxc-c4yxaaak2x_
கௌதம் வாசுதேவ் மேனன் – சிம்பு கூட்டணியில் “அச்சம் என்பது மடமையடா” இரண்டாவது திரைப்படம். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ரசிகர்களை இத்திரைப்படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம் :-
ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ஆர்ப்பாட்டமில்லாத சிம்புவும்தான்.
சிம்பு படித்து முடித்துவிட்டு வழக்கமான தமிழ் சினிமா ஹீரோவை போல் வீட்டில் சும்மா இருக்கின்றார், இவருக்கு இரண்டு தங்கைகள் அப்பா என்ன வேலை செய்கின்றார் என்று படம் முடியும் வரை சொல்லவில்லை. சிம்புவின் தங்கையின் தோழியாக படத்தில் வளம் வருகின்றார் மஞ்சிமா மோகன். இவர் படிப்பை முடித்திவிட்டு சினிமாவில் அசிஸ்டன்ட் டிரைக்டராக ஒரு படத்தில் வேலை செய்ய சிம்புவின் தங்கையுடன் இவரின் வீட்டில் வந்து தங்குகின்றார்.
அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல் வயப்பட்டுவிடுகிறார் சிம்பு. மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் சிம்பு தனது பைக்கில் லாங் டிரைவ் செல்ல போவதாக மஞ்சிமாவிடம் கூறியதும். அடுத்த நாள் சிம்புவுடன் அவரும் கிளம்பிவிடுகின்றார்.
இருவரும் சேர்ந்து பைக்கில் கன்னியாகுமரி செல்கிறார்கள். கன்னியாகுமரி சென்றதும் அங்கிருந்து மஞ்சிமா மகாராஷ்டிரா கிளம்ப ஆயுத்தமாகிறார். மஞ்சிமா மீதான காதல் சிம்புவையும் அவரது புல்லட் வண்டியையும் மகாராஷ்டிரா பக்கம் திருப்புகிறது. ஜாலியாக இவர்கள் ட்ரிப் போய்க் கொண்டிருக்க திடீரென்று ஒரு லாரி இவர்கள் மீது மோத சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.
முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது ஒரு தரப்பு ஆடியன்ஸிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம், மேலும், சிம்பு கால்ஷிட் பிரச்சனையால் பர்ஸ்ட் ஆபில் உடல்வாகு மாறி மாறி தெரிகின்றது.
படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது. இரண்டாவது பாதியில் வரும் சண்டை காட்சிகள் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
சிம்பு தொடந்து இதை போன்ற படங்களை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் படத்தை முடித்து வெளியிட்டால நல்லது.
மஞ்சமா மோகன் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவார் என தெரிகின்றது.
கௌதம் வாசுதேவ் மேனன் இவருக்கும் சிம்புவுக்கும் கண்டிப்பாக ஒருவிதமான காதல் புரிதல் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இனி இருவரும் தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களை தர வேண்டும். வாழ்த்துக்கள் கௌதம்
மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லாமல் படத்தை பார்க்க செல்லலாம்..