மதுரை:

துரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது.

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரானா அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் ஆயிரத்தை கடந்து வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு மிக மிக கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதித்துள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 1497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த 7-ஆம் தேதி நிலவரப்படி, மதுரையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 312-ஆக இருந்து வருகிறது. தமிழக மாவட்ட வாரியான பட்டியலில் மதுரை மாவட்டம் 14-ஆவது இடத்தில் இருந்து வருகிறது.

தற்போது கிடைத்த தகவலின் படி மதுரையில் பெரியளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த தகவலின் படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 55-க்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலனவர்கள் உள்ளுர்வாசிகள் என்பது, இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான 55 பேருடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருவதால், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளனவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.