சென்னை

விரைவில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில்  ஏ சி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் சென்னை பெருநகரத்தோடு புறநகர்ப் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில் சேவை ஆகும்.  இதன் மூலம். குறைந்த கட்டணத்தில் விரைவாகப் பயணம் செய்ய முடிகிறது.

இதனால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது. நாள் தோறும் மின்சார ரயில் சேவையை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வே, சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி ரயில்வே நிர்வாகம் தெற்கு ரெயில்வேக்கு 12 ஏ.சி. EMU பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

முதலில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தட மின்சார ரயில்களில் ஏ.சி, பெட்டிகளை இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.