டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
டெல்லி ஜேஎன்யூ (ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி) பலக்லைக்கழக வளாகத்தில் மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன்,சோலங்கி என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி கொண்டாடியதே இந்த மோதலுக்கு ஆரம்பப்புள்ளி என்று கூறப்படுகிறது.
சிவாஜி படத்தை இடதுசாரி மாணவர்கள் உடைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று ஏபிவிபி அமைப்பினர் குற்றம் சாட்டினர். அதை தொடர்ந்து அங்குள்ள மாணவர் செயற்பாட்டு மன்ற அறையில் 100 பிளவர்ஸ் என்ற மாணவர் அமைப்பினர் திரைப்படம் ஒன்றை திரையிட முயன்றனர். இதற்கு ஏபிவிபி மாணவர்கள் (ஆர்எஸ்எஸ் மாணவர்கள் அமைப்பு) அவர்களை தடுத்ததோடு எந்த படத்தையும் திரையிட கூடாது என்று எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் ழேல் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்குள்ள மாணவர் செயர்மன்ற செயல்பாட்டு அறையில் இருந்த பெரியார், காரல் மார்க்ஸ், லெனின் உருவப்படங்களை ஏபிவிபி அமைப்பினர் அடித்து உடைத்தனர். அப்போது அவர்களை தட்டி கேட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் உள்பட 3 தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி-யினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மேலும், அந்த அறையில், சாவர்க்கர் பெயரை எழுதிவைத்த ஏபிவிபி மாணவர்கள் இடதுசாரி அரசியல் பேசக்கூடாது என்றும் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடுமையாக காயம் அடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதை தடுத்த ஏபிவிபி மாணவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘பெரியாரின் படத்தை உடைத்ததோடு அதை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. பல்கலைக்கழகங்கள் கற்றலுக்கான இடம் மட்டுமல்ல, விவாதம் மற்றும் பலதரப்பட்ட கருத்துகளுக்கான இடமும் கூட. பலகலைக்கழக நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் கல்லூர் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.