சென்னை,
நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய. அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ”நீட் தேர்வை பொறுத்தவரை, தமிழகத்தில் தேவையில்லை என்று கூறியுள்ளோம்.
நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் சென்று அமைச்சரை சந்தித்தோம். தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தகுதியான சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 700 பேர்தான் உள்ளனர்.
மீதம் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் கிராமப்புற மாணவர்கள் அவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அதற்காக நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் வலியுறுத்தியுள்ளோம்” என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.