சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்

Must read

பெரம்பலூர்:

.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது.

கடந்த 10ம் தேதி பெரம்பலூர் எம்.எம். நகரில் உள்ள பங்களா வீட்டில் துர்நாற்றம் வீசியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் அன்த வீட்டினுள் சோதனைபோட்டனர்.

அந்த, வீட்டின் அறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள்,  நாற்பது கடல் குதிரைகள்  இருந்தன.

மேலும், மரப்பெட்டி ஒன்றில், அழுகிய நிலையில்  ஒரு பெண்ணின் உடலும் இருந்தது. இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்  அங்கிருந்த மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா ஆகியோரை கைது செய்தனர்.

கார்த்திகேயன் – நசீமா

அப்போது மந்திரவாதி கார்த்திகேயன் தனக்கு ஒரு வாரம் கொடுக்கும்படி கேட்டார். காவல்ரகள் ஏன் என்று கேட்டனர். அதற்கு மந்திரவாதி கார்த்திகேயன், “சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு  சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான அகோரி பூஜை செய்து வருகிறேன். இந்த அகோரி பூஜைக்காக, இளம்பெண்ணின் சடலத்தின்மீது அமர்ந்து பல்வேறு பூஜைகள் செய்து எனது மாந்திரீக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கூடுவிட்டு கூடு பாய்வேன். அந்த நேரத்தில்தான் என்னை கைது செய்துவிட்டீர்கள். எனக்கு அவகாசம் அளித்தால் கூடுவிட்டு கூடு பாய்ந்து சசிகலாவை சிறையிலிருந்து மீட்டுவிடுவேன்” என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

மேலும், “என்னிடம் இரண்டாயிரம் ஆவிகள் உள்ளன. அவற்றை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம்” என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாத காவல்துறையினர்,  அவரை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, மந்திரவாதி கார்த்திகேயன் வீட்டில்  இருந்த பெண்ணின் சடலைத்தை வேறு எங்கிருந்தாவது பிணமாக கொண்டு வந்தார்களா அல்லது இளம்பெண் ஒருவரை நரபலி கொடுத்துவிட்டார்களா என்ற  அதிர்ச்சிகரமான சந்தேகமும் எழுந்துள்ளது.

More articles

Latest article