ஜெயலலிதா பற்றி விமர்சனம்:  வருத்தம் தெரிவித்தார்  :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 

Must read

a
 
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகிலஇந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தமிழககாங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு உள்பட நிர்வாகிகள்  கலந்துகொண்டார்கள்.
அடுத்ததாக,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி. ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாநிலசெயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில்காங்கிரசில் இணைந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு  அளிக்கப்பட்டது.
முகுல் வாஸ்னிக் பேசும்போது, “காங்கிரஸ் ஆட்சி தந்த ஒளிமயமான ஆட்சியை  திரும்ப கொண்டுவர பாடுபடவேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிமொழிகள் தேர்தல் அறிக்கையில்இடம்பெற்றுள்ளன. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதால் காங்கிரஸ் கட்சி மேலும் வலுவடைந்து வருகிறது”என்றார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து இணைந்திருக்கிறார்கள்.  காங்கிரஸ் கட்சி இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்கு  இந்த  சட்டசபை தேர்தல் ஒரு அரிய வாய்ப்பு ஆகும். தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வர கடுமயாக உழைக்க வேண்டும்.  எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை விவசாயிகள், தொழிலாளர்கள், படித்த இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களை உள்ளடக்கியது” என்றார்.
இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘மே மாதம் முதல் வாரம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்.  அனேகமாக அந்த பிரசார கூட்டம் சென்னையில் நடைபெறும்.  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர்ராகுல்காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வர இருக்கிறார். . தேதி முடிவானதும்  அறிவிப்போம். .
ஜெயலலிதாவை நான் கடுமையாக விமர்சித்ததாக சிலர் சொல்கிறார்கள்.  நான் பேசியது யானைகளிடமும்,மிருகங்களிடமும் காட்டும் அக்கறையை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஜெயலலிதா காட்டவில்லை என்பதுதான்.
நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? அல்லது வேண்டும் என்று என் மீது குற்றம் சாட்டுவதற்காகவா? என்றுதெரியவில்லை. எப்படி இருந்தாலும் சரி என்னுடைய பேச்சு தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்திருந்தால்அதற்காக நான் வருந்துகிறேன்” என்று இளங்கோவன் கூறினார்.

More articles

Latest article