குஜராத்:
பிஜி ஷிப்யார்டு, நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடியை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் நகரைச் சேர்ந்த ‘ABG Shipyard Ltd’ என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ₹.22,842 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

இதில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இதன் கப்பல் கட்டும் தளங்கள் குஜராத்தில் உள்ள தஹேஜ் மற்றும் சூரத்தில் உள்ளன.