சென்னை: அரசு பால்பொருள் நிறுவனமான ஆவினில், கோல்டு காபி உள்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முதல் விற்பனையை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி
- கோல்டு காஃபி (Cold Coffee)
- வெள்ளை சாக்லேட்
- பலாப்பழ ஐஸ்கிரீம்
- வெண்ணெய் கட்டி
- பாசுந்தி
- ஆவின் ஹெல்த் மிக்ஸ்
- பாலாடை கட்டி
- அடுமனை யோகர்ட்
- ஆவின் பால் பிஸ்கட்
- ஆவின் வெண்ணெய் முறுக்கு
ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.
[youtube-feed feed=1]