லக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க இன்று காலை 7 மணிக்கு தேர் தனது நிலையில் இருந்து புறப்பட்டது.

தற்போது, தேர் மாட வீதிகளை சுற்றி ஆடி அசைந்து வந்துகொண்டிருக்கிறது….

திருவாரூர் தேர் ஆடி அசைந்து வரும் அழகை நீங்களும் பாருங்களேன்….

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி  ஆண்டுதோறும் பிரமாண்ட மான ஆழித்தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறதுது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம்  22ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து, தினசரி சுவாதி வீதியுலா நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று  ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திருவாரூரில் குவிந்துள்ளனர். ஏராளமானோர் தேர் வடம் பிடிக்க ஆரூரா தியோகேசா கோஷத்துடன்  இன்று காலை தேர்தல் புறப்பட்டு மாட வீதிகளில் பவனி வந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடி, தியாகராஜரை தரிசித்து வருகின்றனர்.

திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.

தேரைச் சுற்றிலும், மொத்தம் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.