டில்லி,

டில்லி முதல்வர் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.30.67 கோடி அபராதம் விதித்துள்ளது மத்திய அரசு.

34முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், அதுகுறித்த பதில் தெரிவிக்கவில்லை என்றும், அதன் காரணமாக வருமான வரி முறையாக செலுத்தவில்லை என்று கூறி வருமான வரித்துறை இந்த அபராத தொகையை அறிவித்து உள்ளது.

ஊழலுக்கு எதிராக தொடங்கி டில்லியில் ஆட்சியையும் பிடித்தது ஆம்ஆத்மி கட்சி. இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் உள்ளார். இவர்தான் டில்லியில் முதல்வராகவும் இருக்கிறார்.

கட்சியின் 5வது ஆண்டு விழா நேற்று டில்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கடந்த 2014-2015 ஆம் ஆண்டுகளில் கட்சிக்கு நன்கொடை பெற்றதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதற்கான வரி கட்டாமல் ஆம்ஆத்மி கட்சி ஏமாற்றியுள்ளது  கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.

இதன் காரணமாக அதற்கான அபராதமாக ரூ. 30 கோடியே 67 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  மேலும்,  இது தொடர்பாக டிசம்பர் 7 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு 34 முறை அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு விளக்கம் தரவில்லை என்று வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.