பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதை சாதனையை முறியடிக்கும் விதமாக மும்பையில் நடந்த மாஸ்டர் தினாநத் மங்கேஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்தகொண்டார்.

நகரில் புகழ்பெற்ற நபர்ளுக்கான சிறப்பு விருதும் அமீர்கானுக்கு வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்திடம் இருந்து அவர் விருதினை பெற்றுக் கொண்டார். 2016ம் ஆண்டில் தங்கல் என்ற திரைப்படம் வெற்றி பெற்றதற்காக இந்த விருதுக்கு அமீர்கான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் அழைத்ததன் பேரில் அமீர்கான் கல ந்துகொண்டார். தினனத் மங்கேஷ்கரின் 75வது நினைவு நாளை முன்னிட்டு இந்த விழா நடத்தப்பட்டது. கட ந்த 16 ஆண்டுகளுக்கு முன் லகான் என்ற திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் தான் அமீர்கான் கடைசியாக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அமீர்கான் பேசுகையில்,‘‘தற்போது நான் எங்கெங்கு சென்றாலும் அதன் புகழ் அனைத்தும் நான் நடித்த திரைப்படங்களின் கதை எழுதியவர்களுக்கு தான் சேரும். இயக்குனர்கள், எழுத்தாளர்களால் தான் நாங் இங்கு நிற்கிறேன். அவர்கள் அருமையான பணி மேற்கொண்டுள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்தக் கொள்கிறேன்’’ என்றார்.

இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் இயக்குனர் நிதேஷ் திவாரி நன்றி கூறினார்.
இந்த விழாவில் கிரிக்கெட்டிற்கு சிறப்பான பணியாற்றியதற்காக கபில்தேவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தி சினிமாவில் சிறந்த நடிகையாக விளங்கிய வைஜெயந்தி மாலா உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது.