தென்காசி:
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.