சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழகஅரசு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக, அனைத்து தரப்பினரும், தங்களது மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பான தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, தங்களது மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ள மின்சாரம், தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த முகாம் டிசம்பர் 30ந்தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், மனுதாரர், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தடை இல்லை என்று கூறி, எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.