மதுரை:

ல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக தமிழக மக்களி கொதித்தெழுந்ததன் பயனாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில்  தனிச்சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விலங்குகள் நல வாரியம் விதித்துள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் காளைகளை  கொண்டு வருபவர்களும், அதை அடக்க முயற்சிக்கும் இளங்காளைகளும், தங்கள் ஆதார் கார்டை காட்டி, தற்காலி அடையாள அட்டை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின்  மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

அதன்படி அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

அவனியாபுரத்தில் 14ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.