டில்லி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால், தற்போது மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று கூறியிருப்பதாலும், ஜிஎஸ்டி காரணமாக பட்டாசு விற்பனையும் கடும் பாதிப்பை எட்டும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறு வனிகவர்கள் குடோன்களில் இருந்து பட்டாசு வாங்கினோலோ, அதேவேளை யில் வாடிக்கையாளர்கள் குடோன்களில் இருந்து மொத்தமாக நேரடியாக வாங்கினாலோ தங்களது ஆதார் எண் மற்றும் பான் எண்ணை கொடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ள தாக பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி காரணமாக விலைகள் உயர்ந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் சீன பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், தடையை மீறி பல இடங்களில் சீன பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்டாசுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குபவர்கள் தங்களது பான் எண் மற்றும், ஆதார் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பட்டாசு விற்பனையாளர்கள், விற்பனைக்கு பட்டாசு வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசு வாங்கினாலும் தங்களது ஆதார் எண், பான் எண், ஜிஎஸ்டி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டிருப்பது வியாபாரத்தை பாதிக்கும் என்று வணிகர்கள் கருதுகிறார்கள்.