மதுரை,

மிழகம் மற்றும் கேரளா மக்களின் விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் முல்லை பெரியார் அணையில் இருந்து விவசாயத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணையின் மதகுகளை திறந்து வைத்தார்.

 

தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது முல்லை பெரியார் அணை. அணை யிலிருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரத்து 400 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  விவசாயத்திற்காக அணையிலிருந்து  இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது,

இதற்காக குமுளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவ தால், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நீரை   குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.