இந்தியாவுக்குள் விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளவும் பாஸ்போர்ட் அல்லது ஆதார் கட்டாயம் தேவை என்ற விதிமுறை விரைவில் அமலாக இருக்கிறது.
அண்மையில் சிவசேனா எம்பி கெய்க்வாட் விமான பயணத்தின் போது ஏர் இந்தியா ஊழியரைத் தாக்கிய சம்பவம் கடும் சர்ச்சையை எழுப்பியது. ஏர் இ்நதியா விமானங்களில் கெய்க்வாட் பயணிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக உள்ளூர் விமான சேவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து, விமான போக்குவரத்து ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். இதன் விளைவாக, உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்துவோரும், பன்னாட்டு விமானப் பயணத்தின் போது பயணிகள் சமர்ப்பிப்பதைப் போலவே பாஸ்போர்ட்டை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் ஆதார் அட்டையை காண்பிக்கவும் வழிவகை செய்யப்படும் எனத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.