டெல்லி: ஆதார்  அட்டையில் தற்போதைய நிலவரம் தொடர்பாக அப்டேட் செய்வதற்காடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2024ம் ஆண்டு மார்ச் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழும் மக்களின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. இந்த ஆதார் அட்டை பெற்று பத்து வருடம் நிறைவு செய்தவர்கள், அதை இலவசமாக இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் அதை புதுப்பித்துள்ள கொள்ள வேண்டுமென மத்திய அரசு  தெரிவித்திருந்தது.

எந்த விவரத்தை புதுப்பிக்க வேண்டுமோ அதற்கான ஆவணத்தை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம். இதில் பெயர், முகவரி மாற்றம், திருமணம் அல்லது இறப்பு ஏற்பட்டால் உறவினர்களின் விவரங்கள் மற்றும் பிற விஷயங்களை புதுப்பித்து கொள்ளலாம்.

யுஐடிஏஐ இணையதளத்தில் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம். பொது சேவை மையங்களில் (CSC) 25 ரூபாய் செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடைசி  செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் டிசம்பர் 14ந்தேதி வரை என மேலும் 3 மாதம் நீட்டித்து ‘ யூஐடிஏஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது,  மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.

ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி, செல்போன், பிற ஆவணங்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை புதுப்பித்து கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. வரும் டிசம்பர் 14 வரை இலவசமாக myAadhaar போர்ட்டல் மூலம் ஆதாரில் தங்கள் ஆவணத்தை புதுப்பிக்க முடியும்.

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்தனர். தற்போது இந்த ஆண்டு இறுதி வரை myAadhaar போர்ட்டல் மூலம் ஆவணங்களைப் புதுப்பிக்கும் வசதி இலவசமாக தொடரும். myaadhaar.uidai.gov.in புதுப்பித்து கொள்ள முடியும்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி பாலினம் தொலைபேசி எண், கைரேகை மற்றும் கருவிழி போன்ற விவரங்களை அப்டேட செய்ய வேண்டும். இவற்றை 10 ஆண்டுகளில் அப்டேட செய்யாதவர்கள் தற்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் அப்டேட் செய்து வருவதால் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்றும், மக்களின் விவரங்கள் துல்லியமாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.