மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இன்று அதிகாலை மேட்டூர் அனல் மின் நிலைய முதல் அலகான 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றிமளமளவென பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக. கொதிகலன்களுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.