2011 ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் தோனி.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தோனி அடித்த வெற்றிக்கான சிக்ஸர் ஞாபகமாக அந்த பந்து விழுந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.

மும்பையில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடச் சென்றுள்ள தோனி-யை மும்பை கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது,

12 ஆண்டுகளுக்கு முன்பு பெவிலியன் அருகே உள்ள கேலரியில் பந்து விழுந்த ஜெ.282 முதல் ஜெ. 286 வரை உள்ள ஐந்து சீட்டுகளை நினைவுச் சின்னம் அமைக்க தேர்ந்தெடுத்திருக்கிறது.

1983 ம் ஆண்டுக்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பை வென்று மற்றுமொரு வரலாற்றை ஏற்படுத்தியது.

வான்கடே ஸ்டேடியத்தில் நுழைவாயில் மற்றும் பாவையாளர் மாடங்களுக்கு சச்சின், கவாஸ்கர், விஜய் மெர்ச்சண்ட், பாலி உம்ரிகர், வினு மன்கட் ஆகியோர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் தோனி நினைவாக வைக்கப்பட இருக்கும் சின்னம் வித்தியாசமாக உள்ளது.

2015ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியட் அடித்த சிக்ஸர் மூலம் வெற்றிபெற்று இறுதிப்போடிக்கு நுழைந்ததை கௌரவிக்கும் விதமாக அவருக்கு அங்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.