குன்னூர்
திமுக வேட்பாளர் ஆ ராசா தமது மனைவி வாரத்தில்3 நாட்கள் விரதம் இருக்கும் தீவிர ராம பக்தை எனக் கூறி உள்ளார்.
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.. இம்முரை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உள்ளது. நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர் குன்னூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆ ராசா தனது உரையில்.
”பாஜக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்குச்சந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு, நான் தான் விஸ்வகுரு, உலகத்தின் தலைவர் எனச் சொல்கிறார்கள். என் மனைவி தீவிர ராம பக்தை. அவர் சனிக்கிழமை ராமருக்காகவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருப்பார்.
என் வீட்டில் பூஜை அறை இருந்தாலும் ஒருநாள் கூட நான் உள்ளே சென்றது இல்லை. கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அவருக்கு உள்ளது. நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை வழிபடுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆன்மிகமும், பக்தியும் தனிமனிதத் தேவைக்காகவே. என் ஆன்மாவைச் சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம்தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”
என்று தெரிவித்துள்ளார்,