ஜல்லிக்கட்டு.. ‘‘தமிழா தமிழா கண்கள் கலங்காதே’’ ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு பாடி ஆறுதல்

Must read

 

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பபளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.


இன்று காலை 4.30 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பழச்சாறு குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அப்போது அவர் ‘‘தமிழா தமிழா கண்கள் கலங்காதே… விடியும் விடியும் உள்ளம் மயங்காதே..என் வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா..’’ என்று பெரிஸ்கோப் லைவ் வீடியோவில் பாடினார்.

ரஹ்மானுடன் அவரது மகன் அமீன், ஜி.வி.பிரகாஷ், ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்டோரும் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக வீடியோவில் ரஹ்மான் பதிவு செய்துள்ளார்

More articles

Latest article